கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சாலையில் உள்ள காமராஜரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா.

கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சாலையில் உள்ள காமராஜரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா.பாண்டிய ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-07-15 16:09 GMT
விருதுநகரில் கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சாலையில் உள்ள காமராஜரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா.பாண்டிய ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பின்னர் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி காமராஜர் இருந்த போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பாக இருந்தனர் எனவும் அதனால் தான் காமராஜர் தன்னுடைய கடைசி காலத்தில் காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் என்றார். மேலும் காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் காமராஜரின் புகழ் தங்களுக்கு மட்டுமே சொந்தமான தாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் காமராஜரின் பெயரை பயன்படுத்துவதாகவும் காமராஜரின் புகைப்படத்தை போடுவதும் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாட்டுக்காக மட்டும் தான் என கே.டி. இராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்தார். மேலும் பேசிய கே.டி.இராஜேந்திர பாலாஜி காமராஜரின் புகழுக்கும் பெருமை சேர்த்தவர்கள் அதிமுக தான் எனவும் காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றுவதற்காக தான் காமராஜரின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி கல்விக்கண் திறந்தவர் காமராஜர் எனவும் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பெஞ்சை மட்டுமே மாற்றி வைத்திருக்கிறார்கள் எனவும் பள்ளிக்கூடங்களில் வரிசையாக இருந்த பெஞ்சை மாற்றி போட்டால் அதுவும் ஒரு திட்டம் என்கிறார்கள் எனவும் எனவேதான் திமுக ஒரு விளம்பர ஆட்சி என்றார். மேலும் காமராஜர் இருக்கிற வரை அவருக்கு இடைஞ்சல் செய்த கட்சி தான் திமுக எனவும் திமுக எப்போதுமே மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுக்கும் எனவும் திமுகவினர் போடுவதும் அனைத்தும் வேசம் என்றார். மேலும் 2026 திமுகவின் கனவு பலிக்காது எனவும் 2026 தேர்தலில் வெற்றி பெற்று எம் ஜி ஆர் காமராஜரின் ஆட்சியை அதிமுக அமைக்கும் என்றார். மேலும் இன்றைக்கு காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுகிறது எனவும் தற்போது பெருந்தலைவர் காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி இல்லை எனவும் இது இத்தாலி காங்கிரஸ் என விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏதோ ஒரு பதட்டத்தில் பேசுகிறார் எனவும் திமுகவின் மீது உள்ள கோபத்தை திருமாவளவன் அதிமுக மீது காட்டுகிறார் எனவும் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார் என்றார்.. மேலும் அதிமுக கட்சி இருக்க வேண்டும் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசுகிறார் எனவும் திமுகவில் திருமாவளவனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்றார். மேலும் திமுக கூட்டணியில் மிகப்பெரிய பூகம்பம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அது விரைவில் ஒட்டுமொத்த திமுக கூட்டணி உடையும் என்றார். மேலும் 4 ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற ஏமாற்று நாடகத்தை திமுக போடுகிறது என விமர்சனம் செய்தார். மேலும் பேசிய கே டி ராஜேந்திர பாலாஜி எந்த ஊரு திட்டத்தையும் யோசனை இன்றி திமுக செயல் படுத்துவதாகவும் அதற்கு உதாரணமாக பள்ளிக்கூடங்களில் பா வடிவில் பெஞ்சுக்களை மாற்றி அமைப்பது என்றார். மேலும் ஓபிஎஸ் விஜய்க்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து கேள்விக்கு பதில் அளித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிமுகவிற்கு என வாக்கு செலுத்துபவர்கள் அனைவருமே இரட்டை இலை தான் வாக்களிப்பார்கள் என்றார். மேலும் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகும் நிகழ்ச்சிக்கு விஜய் உள்பட அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றார். மேலும் அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களும் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தான் இருக்கிறார் கள் எனவும் இனியும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது என்றார். மேலும் எங்களிடத்தில் யார் வந்தாலும் பலம் தான் எனவும் தற்போது நாங்கள் பலவீனமாக இல்லை எனவும் நாங்கள் பலமாக தான் இருக்கிறோம் எனவும் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டு சென்ற தலைவர்களால் கட்சிக்குள் எந்தவித சேதமும் இல்லை என்றார்.

Similar News