கரூர் மாவட்டத்தில் 12.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 12.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 12.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5:30- மணி அளவில், காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதில் கரூரில் 6.40 மில்லி மீட்டர், குளித்தலையில் 1.40 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 3-மில்லி மீட்டர், மாயனூரில் 1.60 மில்லி மீட்டர் என மாவட்ட அளவில் மொத்தம் 12.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளதாகவும்,இதனுடைய சராசரி அளவு 1.03 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.