தாராபுரம் நகர மன்ற சாதாரண கூட்டத்தில் 127 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-08-21 16:29 GMT
தாராபுரம் நகர மன்ற சாதாரண கூட்டத்தில் 127 தீர்மானங்கள் நிறைவேற்றம்  தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது  இக்கூட்டத்தில்  நகர மன்ற தலைவர் நகர் மன்ற துணைத் தலைவர் உட்பட 28 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் 126 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .இதில் 100 வது கூட்டப் பொருளாக நகர்மன்ற தலைவர் அவர்களால் கொண்டு வரப்படும் தீர்மானம் என ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது  பேருந்து நிலைய தென்புற கடை என் 9 குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த கிட்டாத்தாள் என்பவர் கடைக்கு வாடகை செலுத்தாத காரணத்தால்  வைப்பு தொகையிலிருந்து நிலுவைத் தொகையினை பிடித்தம் செய்து கொள்ளவும் குத்தகை உரிமத்தை ரத்து செய்து பொது கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.  நகர மன்ற தலைவரிடம் கிட்டத்தாள் கோரிக்கை மனு அளித்தார். அப்போது குத்தகைதாரர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் வாடகை செலுத்த முடியவில்லை எனவும் தற்போது வாடகை நிலுவைத் தொகையினை முழுவதும் செலுத்தி விடுவதாகவும் எனது குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடையை மீண்டும் நடத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தார்  எனவே அக்கடையினை த கிட்டாத்தாள் என்பவருக்கு தொடர்ந்து வாடகைக்கு விடுவதற்கு மன்றத்தின் முடிவுக்கு வைத்தார். அப்போது 6 நகர் மன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டப் பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் குறைந்த அளவு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மெஜாரிட்டியாக அனுமதி அளித்ததாலும் இந்த தீர்மானம் உட்பட 127 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக நகர் மன்ற தலைவர் தெரிவித்தார். மேலும் 30 வார்டுகளிலும் சாக்கடை கழிவுகளில் தேங்கியுள்ள மண் குவியல்களை அப்புறப்படுத்தவும், சிறு பாலம் கட்டுதல், மழைநீர் வடிகால் கட்டுதல் உட்பட பணிகள் நடைபெற்று வருவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News