சிவகிரியில் ரூ. 1.28 கோடியில் எரிவாயு தகன மேடை திறப்பு

ரூ. 1.28 கோடியில் எரிவாயு தகன மேடை திறப்பு;

Update: 2025-06-12 00:45 GMT
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சியில் ரூ.1.28 கோடியில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 இன் மூலம் அமைக்கப்பட்ட எரிவாயு தகனமேடையை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து எரிவாயு தகன மேடை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவா் கோமதி சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லட்சுமி ராமன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி நிா்வாக அலுவலா் வெங்கடகோபு வரவேற்றாா். வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் விளக்கேற்றினாா். இதில், திமுக மாநில மருத்துவரணி துணைச் செயலா் டாக்டா் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலா் மனோகரன், நகரச் செயலா் சேது சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

Similar News