பேராவூரணி அருகே ரூ.1.28 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்
சாலைப்பணி;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், களத்தூர் ஊராட்சி, களத்தூர் ஆதிதிராவிடர் காலனி முதல் சித்துக்காடு பாலக்கரை வரை சுமார் 1.80 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய தார்ச்சாலை ரூ.68.63 லட்சம் மதிப்பீட்டிலும், காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு - ஆனைக்காடு இணைப்பு சாலை சுமார் 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூபாய் 60 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை, திங்கள்கிழமையன்று, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேராவூரணி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், செருவாவிடுதி சி.துரைராஜ், களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், செந்தில், நாகராஜ், இளங்கோ, சிவகுமார், அன்பழகன், காலகம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், குட்டியப்பன், வழக்குரைஞர் அடைக்கலம், சுப்பையன், விஜயகுமார், அய்யர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.