செந்துறை அருகே துணிகரம் மூதாட்டி வீட்டில் 13 கிராம் தங்க நகைகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு.
செந்துறை அருகே துணிகரம் மூதாட்டி வீட்டில் 13 கிராம் தங்க நகைகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வீசி தேடி விசாரித்து வருகின்றனர்.;

செந்துறை அருகே மூதாட்டி வீட்டிற்குள் புகுந்தம் இரண்டு மர்ம ஆசாமிகள் 13 கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர் அவர்களை போலீசார் தொலைபேசி தேடி விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழ மாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு வயது 60 இவரது மகன் ராஜதுரை இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார் இதனால் மூதாட்டி அலமேலு தனியாக தனது ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார் இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பின் பக்க கதவை பூட்டிவிட்டு தனது வீட்டில் படுத்து தூங்குகிறார் அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் பின் பக்கம் சத்தம் கேட்டதால் மூதாட்டி அங்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது இரண்டு மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்து ஓடியுள்ளனர்.எதனால் சந்தேகம் அடைந்த மூதாட்டி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார் அப்போது வீட்டில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 13 கிராம் தங்க நகைகளை மர்ம ஆசாமைகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 மர்ம ஆசாமிகளையும் தேடி விசாரித்து வருகின்றனர்.. .