கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் கைது !
கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தனியார் மில்லில் வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தனியார் மில்லில் வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். துடியலூர் அருகே தனியார் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சொரீப் மற்றும் லோதிப் அலி ஆகிய இருவர் ஏற்கனவே கைதான நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பீளமேடு போலீசார் நடத்திய சோதனையில், வீரியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 13 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாப்லு, சமீர், ஷேஹாக், அல்அமீன், ஜித்தோன், சொரீப், போனி, ரூஷல், முகமது அல்டாப், ரஷீப், டைடா, அராபத், சையோன் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கைதானவர்கள் கோவைக்கு வந்து சில நாட்களே ஆவதாக தெரிவித்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.