ஜெயங்கொண்டத்தில் காமராஜர் சிலையை அகற்றி 13 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் சிலைவைக்க நடவடிக்கை இல்லை.மீண்டும் சிலையை வைக்க காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளது.
ஜெயங்கொண்டத்தில் காமராஜர் சிலையை அகற்றி 13 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் சிலையை அமைக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
அரியலூர், ஜூலை.3- ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அருகே விருத்தாச்சலம் சாலை திருப்பத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்கத்திற்காக அந்த சிலை அப்போது அகற்றப்பட்ட நிலையில் இது நாள் வரை காமராஜருக்கு சிலை வைக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கர்மவீரரும், தமிழக முன்னாள் முதல்வருமான காமராஜருக்கு சிலை வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஜூலை 15ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது., தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பணிகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளிடையே விரிவாக பேசினர்.இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.