ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேர் கைது!

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேர் கைது நான்கு அறரிவாள், 1100 கிலோ கஞ்சா இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் காவல்துறை நடவடிக்கை;

Update: 2025-08-26 12:14 GMT
தூத்துக்குடியில் மாநகரப் பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதால் அதிக அளவு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று நடத்திய தீவிர ரோந்து பணியில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 91 காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஏழு இளைஞர்கள் மற்றும் அரிவாலுடன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஆறு இளைஞர்கள் என மொத்தம் 13 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 1100 கிராம் கஞ்சா நான்கு அரிவாள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் மேலும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இவ்வாறு கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக ஹைலோ போலிஸ் எண் 9514144100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்

Similar News