திருப்பத்தூரில் 1330 திருக்குறள் ஒப்புவித்த பள்ளி மாணவனுக்கு முதல் பரிசை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
திருப்பத்தூரில் 1330 திருக்குறள் ஒப்புவித்த பள்ளி மாணவனுக்கு முதல் பரிசை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 1330 திருக்குறள் ஒப்புவித்த பள்ளி மாணவனுக்கு முதல் பரிசை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் தெய்வ புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் 24 ஆம் தேதி அன்று துவக்க விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பேச்சு போட்டி, கவிதை போட்டி, புகைப்பட கண்காட்சி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலை இன்று நிறைவு விழா மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட மைய நூலகர் எழிலரசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி கலந்து கொண்டு 1330 திருக்குறள் ஒப்புவித்த பள்ளி மாணவன் கவியரசுக்கு சால்வை அணிவித்து முதல் பரிசு தொகையான 5000 ரூபாய் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி, வாசகர் வட்ட தலைவர் அட்சயா முருகன், நூலக கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், நூலகர்கள் எழிலரசன், பிரபாகரன், பச்சை முத்து, சரஸ்வதி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.