அண்ணன் அம்பேத்கர் 135 -வது பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவை முன்னிட்டு

1252 பயனாளிகளுக்கு ரூ.31.20 கோடி நலத்திட்ட உதவி - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்;

Update: 2025-04-14 10:55 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில், அண்ணல் அம்பேத்கர் 135- வது பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள், ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.53,95,500 மதிப்பீட்டில் இ-பட்டாவையும், 10 பயனாளிகளுக்கு ரூ.69,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், வேதாரண்யம் நகராட்சி மூலம் 10 தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உதவி உபகரணங்களையும், கூட்டுறவு துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன்களையும், வருவாய்த்துறை சார்பில் 78 பயனாளிகளுக்கு ரூ.38.61 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவையும், சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வைப்பு தொகைக்கான ரசீதுகளையும், திருமணம் மற்றும் இயற்கை மரணம் போன்றவைக்கான உதவித் தொகையையும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 794 பயனளிகளுக்கு ரூ.27.79 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், 1252 பயனாளிகளுக்கு ரூ.31 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில், அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் கோ.அரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ரேணுகாதேவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) க.சக்திவேல் கலியபெருமாள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News