கரூர் மாவட்டத்தில் 13.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் 13.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Update: 2024-11-14 04:01 GMT
கரூர் மாவட்டத்தில் 13.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து உள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வந்தது. இதனிடையே நேற்று இரவு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அணைப்பாளையத்தில் 10.00 மில்லி மீட்டரும், க. பரமத்தியில் 3.60 மில்லி மீட்டர் என மொத்தம் 13.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.13 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News