ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் 14.ஆம் ஆண்டு விழா.. மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்பு..
ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் 14.ஆம் ஆண்டு விழா.. மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்பு..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் 14ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது விழாவில் பள்ளியின் தலைவர் எஸ் குணசேகரன் தலைமை வகித்தார் பள்ளியின் செயலாளர் ஜி பற்றி வெற்றிச்செல்வன் தாளாளர் எஸ். ரோஷினி வெற்றிச்செல்வன் இணை செயலர் மல்லிகா குணசேகரன் சேலம் ஸ்ரீ சுவாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ் வெங்கடேசன் இணைச் செயலாளர் ஆர்த்தி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளியின் முதல்வர் ஆர் சுதா ரமேஷ் பள்ளியின் கல்வி மற்றும் விளையாட்டு குறித்து ஆண்டறிக்கை யாக வாசித்தார். விழாவில் பேசிய சேலம் மற்றும் ஆத்தூர் ஸ்ரீ சுவாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் மாணவர்கள் கடின உழைப்பு ஒழுக்கம் இவற்றை கடைபிடித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றார். பள்ளியின் தலைவர் எஸ் குணசேகரன் விழாவில் பேசுகையில், இப்பள்ளி மாணவர்கள் பல தூய துறைகளில் இன்று உயர்ந்து நிற்பதியை சுட்டிக்காட்டி பேசினார் நல்ல நண்பர்கள் நல்ல எண்ணம் நல்ல பழக்கங்கள் இவர்களை கடைப்பிடித்தால் எண்ணியதை அடைய முடியும் என குறிப்பிட்டார். மேலும் கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்கள் மாவட்ட மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் தனிநபர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவ மாணவியர்கள் விளையாட்டு ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.