தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா – சூலூர் தெற்கு ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது !

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஏழாவது பிறந்த நாள் விழாவில் தமிழக வெற்றி கழகத்தினர் மரியாதை.;

Update: 2025-09-17 09:19 GMT
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், கழகச் செயலாளர் கார்த்திக் காமராஜர் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கோவை புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News