செந்துறை மக்கள் தொடர்பு முகாமில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செந்துறை மக்கள் தொடர்பு முகாமில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-12 18:14 GMT
அரியலூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 149 பயனாளிகளுக்கு ரூ.67.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வேளாண்மைத்துறை  உள்ளிட்ட துறைகளின் கீழ் 149 பயனாளிகளுக்கு ரூ.67.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர், பொதுமக்களிடமிருந்து 35 கோரிக்கை மனுக்களை பெற்றார்.முன்னதாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 184 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 161 மனுக்கள் ஏற்கப்பட்டு 23 மனுக்கள் விசாரணையில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கீதா, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் வேலுமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். :

Similar News