முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் -15 இல் நாமக்கல் வருகை... !பந்தல் அமைக்க பூமி பூஜை!

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பிக்க வருகிற அக்டோபர் 15ஆம் தேதி அன்று நேரடியாக வருகை தந்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்கள்.

Update: 2024-10-06 09:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் - சேலம் செல்லும் சாலையில் பொம்மைகுட்டை மேடு பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி பந்தல் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டினார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தெரிவித்ததாவது... தமிழக முதல்வர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று முடிவுற்ற புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பிக்க வருகிற அக்டோபர் 15ஆம் தேதி அன்று நேரடியாக வருகை தந்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்கள். அதன்படி கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சி துறை போன்ற துறைகளின் சார்பில் முடிவற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News