ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை ஏமாற்றி பாதைகள் இல்லாத இடத்தை விற்ற அரசு பள்ளி ஆசிரியர்.15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு... அரசு பள்ளி ஆசிரியர

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை ஏமாற்றி பாதைகள் இல்லாத இடத்தை விற்ற அரசு பள்ளி ஆசிரியர்.15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு... அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...*;

Update: 2025-04-07 14:50 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை ஏமாற்றி பாதைகள் இல்லாத இடத்தை விற்ற அரசு பள்ளி ஆசிரியர்.15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு... அரசு பள்ளி ஆசிரியர
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை ஏமாற்றி பாதைகள் இல்லாத இடத்தை விற்ற அரசு பள்ளி ஆசிரியர்.15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு... அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திகுளம் - தெய்வேந்திரி ஊராட்சியில் கிருஷ்ணா நகர் பகுதி உள்ளது.இதில் சிவகாசியில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த திருப்பதி ஆசிரியர் என்பவர் அவரது மனைவி மாரியம்மாள் பெயரில் உள்ள 26 பிளாட்டுகளில் 20 பிளாட்டுகளை நடைபாதை இருப்பதாக கூறி வரைபடம் தயாரித்து அத்திகுளம் ஊராட்சி தலைவரின் அனுமதி பெற்று பொதுமக்களிடம் விற்பனை செய்துள்ளார். சில ஆண்டுகள் பிறகு தற்போது திருப்பதியின் உறவினர்களான சாந்தா என்பவருடைய வாரிசுதாரர்கள் நடைபாதையில் உள்ள இடம் தங்களது சொந்தமானது எனக்கூறி வேலி அமைத்து பொதுமக்கள் செல்ல முடியாமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அடைத்துள்ளனர்.இடம் விற்பனை செய்ததை குறித்து அரசு பள்ளி ஆசிரியர் திருப்பதியிடம் கேட்டபோது உரிய பதில் சொல்ல மறுப்பதாகவும், முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாகவும் திருப்பதி ஆசிரியர் வீட்டு முன்பு முற்றுகையிட்ட கிருஷ்ணாநகர் பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடைபாதை இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமப்பட்டும் குடிநீர் இல்லாமல் அவதிக்குள்ளாவதாகவும் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அரசு பள்ளி வாத்தியார் திருப்பதி மற்றும் அவரது மனைவி தங்களை ஏமாற்றி இடத்தை விற்பனை செய்ததாகவும் இதுகுறித்து காவல் நிலையம்,வருவாய்த் துறையினர்,மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அன்றாட தேவைக்காக மற்றவர்கள் வாங்கிய பிளாட்கள் மூலம் நடைபாதை இல்லாமல் சகதிக்குள் சிரமப்பட்டு சென்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தங்களை ஏமாற்றிய திருப்பதி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து தாங்கள் சென்றுவர பாதையை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டாலின் அரசு முன்வர வேண்டும் என கிருஷ்ணா நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : முத்துக்குமார்

Similar News