திருச்செங்கோட்டில் 15 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டு சிறப்பு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த தம்பதியினருக்கு மகன் போல் இருந்து சிறப்பு செய்துவருகிறார். முதல்வர் முதியோர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை துவங்கி உள்ளார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம்;
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் அறிவிப்பு 2025-26 எண் 28 ன் படி ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்ய அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இன்று இந்தத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான கடைசி நாள் என்பதால் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில்15 இணையர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தம்பதிகள் இடமிருந்துஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள தம்பதியரில் யாராவது ஒருவருக்கு 71 வயது ஆகியிருந்தால் தகுதியானவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் ஆண்டு என்பதால் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி வந்த மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 100க்கும் மேற் பட்டவர்களுக்கு சிறப்பு செய்யப் பட்டதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவித்தனர் அறநிலையத்துறை சார்பில் வேட்டி, சட்டை, சேலை, ஜாக்கெட், மாலை மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை ரூ 2500 மதிப்புள்ள பொருட்கள் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் சார்பில் மிக்சி மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டு தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை நாமக்கல் உதவிஆணையர் வாசுதேவன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், திருச்செங்கோடு முன்னாள் ஒன்றிய தலைவர் சுஜாதா தங்கவேல்,அறங்காவலர் குழு உறுப்பினர் சித்ரா வண்ணக் கண்ணன் மற்றும்கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள்,மூத்த தம்பதியினரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத இணையர்கள் மாலை மாற்றி கொண்டனர். இதனைத் தொடர்ந்து மூத்த தம்பதியினருக்கு சீர்வரிசைகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் தம்பதியினர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.மூத்த தம்பதியினருக்கும் அவருடன் வந்த உறவினர்களுக்கும் உணவு வழங்கப் பட்டது.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய மூத்த தம்பதியினர் தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறியதாவது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மூத்த தம்பதியினரை சிறப்பு செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கடந்த அக்டோபர் மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 200 தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதன் அடிப்படையில் இன்று திருச்செங்கோடு மலையில் மூத்த தம்பதியினரின் தாய் மகன் போல் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் அவர் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிட்டாலும் எங்கள் மூலமாக இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.என கூறினார்.