நாகை மாவட்டத்தில் வருகிற 15 -ம் தேதி முதல் வருகிற ஜூன் 14-ம் தேதி வரை

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் - 1500 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது;

Update: 2025-04-13 07:37 GMT
தமிழ்நாட்டில் வருகிற 15 -ம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. இக்காலத்தில், வங்காள விரிகுடா, பாக் நீர் சந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் வாழும், கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வருவதால், இம்மாதங்களில் இப்பகுதிகளில் விசைப்படகுகள் மூலம், விசை படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில் வருகிற 15 -ம் தேதி முதல் வருகிற ஜூன் 14-ம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, மீன்பிடி தடை காலத்திற்கு முன், விசைப்படகு மீனவர்கள் வருகிற 15 -ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 1500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு, விசை மற்றும் இழுவை படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பைபர் படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News