விக்கிரவாண்டியில் உழவர் சந்தை ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு
சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை அடுத்து நிதி ஒதுக்கீடு;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா சட்ட சபையில் விவசாயிகள் பயன்பெற விக்கிரவாண்டியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார்.அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, புதிய உழவர் சந்தைக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள இடத்தில் உழவர் சந்தை அமைய உள்ளது.இதனால் தொகுதியில் உள்ள ரெட்டிகுப்பம், ராதாபுரம், பாப்பனப்பட்டு, வி.சாலை, வி.சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், தொரவி, சிறுவள்ளிக்குப்பம், வாக்கூர், பகண்டை, வெட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.