சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தின பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்தியாவின் முதல் துணை பிரதமர் /இரும்பு மனிதர் என்று போற்றப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.;
நாமக்கல்லில், எனது இளைய பாரதம் (Mera Yuva Bharath, My Bharath) அலுவலகம் சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தின பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என, அவ்வலுவலகத்தின், கணக்கு மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் முனைவர் பா. வள்ளுவன், நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.அதன்படி, இந்திய அரசின், இளைஞர் விவகாரத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், நாமக்கல்லில் உள்ள எனது இளைய பாரதம் அலுவலகம் சார்பில் நடத்தப்படவுள்ள, சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பாத யாத்திரை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எனது இளைய பாரதம் அலுவலகத்தில் (3.11.2025) நடைபெற்றது.இதில், அந்த அலுவலகத்தின், கணக்கு மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் முனைவர் பா. வள்ளுவன், நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு, சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்த தின பாதயாத்திரை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.மேலும், சர்தார் வல்லபாய் படேல்@150 என்ற, மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள விழிப்புணர்வு கையேடுகள் குறித்தும் பேசினர்.அப்போது செய்தியாளர்களிடம் கூறிய பா. வள்ளுவன்,அகில இந்திய அளவில், நாமக்கல் உள்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பாத யாத்திரை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாத யாத்திரை நிகழ்ச்சியில், தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, எனது இளைய பாரதம் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் பங்கேற்பார்கள்.இந்த பாத யாத்திரையின் போது, சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாறு, நாடுகளை ஒருங்கிணைத்த பெருமை, அவரது புகழ் ஆகியவற்றை பாராட்டும் வகையில், *சர்தார்@150 பாத யாத்திரை* நடத்தப்படுகிறது. இளைஞர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.முன்னதாக, டெல்லியில், 2025 அக்டோபர் 6-ம் தேதி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் மான்சுக் மாண்டவியா, பாதயாத்திரை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் 31.10.2025 முதல் 25.11.2025 வரை பாதயாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சர்தார் வல்லபாய் படேலின் சாதனைகள் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.நாமக்கல்லில் இந்த பாத யாத்திரை நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நாமக்கல் எனது இளைய பாரதம் அலுவலகத்தின், கணக்கு மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் முனைவர் பா. வள்ளுவன் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நாமக்கல் எனது இளைய பாரதம் அலுவலக பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.