திரைப்படத்துக்கு எதிர்ப்பு: கோவையில் நாம் தமிழர் கட்சியினர் 16 பேர் கைது !
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள கே.ஜி திரையரங்கில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள கே.ஜி திரையரங்கில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையிலான இந்த போராட்டத்தில், ஒருவர் திரையரங்குக்குள் கொடியுடன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 16 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தையடுத்து நேற்று காலை திரையிடவிருந்த கிங்டம் திரைப்பட காட்சி ரத்து செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர், இப்படம் திரையிடப்படக்கூடாது என்றும் மீண்டும் திரையிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.