விருத்தாசலத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர்

போக்சோ வழக்கில் போலீசார் விசாரணை

Update: 2024-09-05 17:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் நகரத்திற்குட்பட்ட அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் மகன் தனுஷ் (21). இவர் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டு தன் வீட்டில் வைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு வயிற்று வலி வந்துள்ளது. இதனால் சிறுமியை விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தனுஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News