அச்சன்புதூா் பகுதியில் நாளை 17இல் மின்தடை

அச்சன்புதூா் பகுதியில் நாளை 17இல் மின்தடை;

Update: 2025-06-16 01:22 GMT
தென்காசி மாவட்டம் அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (ஜூன்17) மின் தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: அச்சன்புதூா் துணை மின் நிலையத்தில் ஜூன்17இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவர்.

Similar News