வெஞ்சமாங் கூடலூரில் வெறிநாய்கள் அட்டகாசம்.17 ஆடுகளை கடித்து கொன்றது.15 ஆடுகள் படுகாயம்.
வெஞ்சமாங் கூடலூரில் வெறிநாய்கள் அட்டகாசம்.17 ஆடுகளை கடித்து கொன்றது.15 ஆடுகள் படுகாயம்.;
வெஞ்சமாங் கூடலூரில் வெறிநாய்கள் அட்டகாசம்.17 ஆடுகளை கடித்து கொன்றது.15 ஆடுகள் படுகாயம். விவசாயிகள் விவசாயத் தொழிலுக்கு இணையாக ஆடுகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரவக்குறிச்சி தாலுகா வெஞ்சமாங் கூடலூர் ஊராட்சி பகுதியில் நல்ல சிவம் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவரது ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்திருந்த 12 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் கொன்று விட்டது.மேலும் 15 ஆடுகளை கடித்து குதறி உள்ளது. அதேபோல நேற்று இரவு அருகில் உள்ள புங்கு தோட்டம் ராஜேந்திரன் என்பவர் வளர்த்து வந்து 5 ஆடுகளை கடித்து கொன்றது. வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கட்டுப்பாடு இன்றி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த அரசு அதிகாரிகள் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.