பரமத்தி வேலூரில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது.
பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு விசாயம் செழிக்க,நாடு சுபிட்சம் பெற வேண்டியும் மோட்ச தீபம் விடப்பட்டது.
பரமத்தி வேலூர்,:4- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி கரையோரம் உள்ள காசி விஸ்வநாதர் ஆலையத்தில் இருந்து மோட்ச தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக காவிரி ஆற்றிற்கு எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சி காவிரித்தாயை வணங்கி வழிபடும் வகையிலும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சம் பெறுவதற்காக இந்த மோட்ச தீபம் விடப்பட்டது. இந்த மோட்ச தீபத்தை காண பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் வந்திருந்து மோட்ச தீபத்தை பார்த்து வழிபட்டனர். பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருடம் தோறும் நடைபெற்று வந்த பரிசல் போட்டி காவிரியில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பாதுகாப்பு கருதி இந்த வருடம் பரிசல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த வருடம் பரிசல் போட்டி இல்லாததால் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.