கரூரில் கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூரில் கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூரில் கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு வாடகை கடை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் வணிகவிரோத சட்டங்களை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட 18% வரியை திரும்ப பெற வலியுறுத்தியும், கடந்த 44 ஆண்டுகளாக செயல்பட்ட RMS நிறுவனத்தை இழுத்து மூடுவதற்குஎதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அதனை செயல்படுத்த வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6- சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பதை திரும்ப பெற வலியுறுத்தியும், வணிகவரி கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வலியுருத்தியும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வலியுறுத்தியும், மாதாந்திர மின் கட்டணத்தை அமலாக்கம் செய்திட வலியுறுத்தியும், வணிக உரிமம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்திட கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.