ஆடி 18 முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்க்கு 1000 கண் அலங்காரம்..சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...
ஆடி 18 முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்க்கு 1000 கண் அலங்காரம்..சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆடி மாதம் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பல்வேறு அலங்காரங்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆடி 18 முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்க்கு 10.ம் ஆண்டாக 1000 கண்கள் கொண்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்று பின்னர் இந்த சிறப்பு அலங்காரத்தை கோயில் பூசாரிகள் செய்திருந்தனர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆயிரம் கண் கொண்ட அம்மனை நிண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..