ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் 1008 குத்துவிளக்கு பூஜை.
பரமத்தி வேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் வட்டம் நன்செய் இடையாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் ஆடி 18 பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும். அதே போல் இந்த வருடமும் ஆடி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். பண்டிகையை முன்னிட்டு முதல்நாள் பூஜையான வியாழக்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நன்செய்இடையாறு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வரிசையில் அமர்ந்து விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.