விநாயகர் சதுர்த்தி விழா: கோவையில் 1,800 போலீசார் பாதுகாப்பு !
கோவை மாவட்டம் முழுவதும் 1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, 3,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 714 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழா மற்றும் சிலை கரைப்பு ஊர்வலங்களுக்கு பாதுகாப்பாக 1,800 போலீசார், அதிவிரைவு படை, ஆர்.ஏ.எப் மற்றும் நான்கு பட்டாலியன் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரில் மொத்தம் 2,000 கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 12 இடங்களில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கோவை மாவட்டம் முழுவதும் 1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, 3,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.