க.பரமத்தி அருகே ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை. எம்.எல்.ஏ. பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்

க.பரமத்தி அருகே ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை. எம்.எல்.ஏ. பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்

Update: 2024-09-23 12:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
க.பரமத்தி அருகே ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை. எம்.எல்.ஏ. பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதி ரெட்டி பாளையத்தில் ரூபாய் 12.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடமும், அருகிலுள்ள மோளப் பாளையம், இந்திரா நகரில் 6.42 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கவும் பூமி பூஜை நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. புதிய நாடக மேடை மற்றும் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ இளங்கோ, இந்த பணிகளுக்கான பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கார்த்திக், க.பரமத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மனோகரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News