ராசிபுரம் அருகே 19 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்...

ராசிபுரம் அருகே 19 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்...;

Update: 2025-08-17 14:20 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொ. ஜேடர்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2006- 2008 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்வானது நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் பள்ளி பருவத்தினை நினைவு கூர்ந்து பகிர்ந்தனர். அதனை தொடர்ந்து அக்காலத்தில் விளையாடிய ஆலமரம் விளையாட்டு, இசை நடனம், நாற்காலி விளையாட்டு, மேலும் தளபதி ரஜினி படத்தில் வரும் பாட்டு குழுவாக பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு பல நல்ல திட்டங்களை ஏற்படுத்த வரும் ஆண்டில் அதை அனைவரும் செய்வோம், என தெரிவித்தனர். மேலும் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் தங்களது அக்காலத்தில் பயின்ற கல்வி முறைகளும், இக்காலத்தில் உள்ள கல்வி பற்றி பேசி குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

Similar News