கோவை பேருந்து நிலையத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து – 19 வயது இளம் பெண் பலி, 3 பேர் படுகாயம்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பயணிகள் மீது மோதி விபத்து.;
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் வாளையாருக்கு செல்வதற்காக கிளம்பிய அரசு சிறப்பு சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நேற்று தாறுமாறாக ஓடியது. இதனால் அருகில் நின்று இருந்த நான்கு பேருந்துகள் மற்றும் பயணிகள் மீது மோதியது. சம்பவத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ஹரிணி (19) உயிரிழந்தார். மேலும் வின்சி, சத்யா மற்றும் அடையாளம் தெரியாத 55 வயது நபர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் பேருந்து நிலையம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.