ஓமலூர் அருகே காரில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்
டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார், ஓமலூர் அருகே ஜோடுகுளி என்ற இடத்தில் ஒரு ஓட்டல் முன்பு நின்றது. தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் காரின் அருகில் சென்று டிரைவரிடம் எங்கு இருந்து வருகின்றீர்கள் என்று விசாரித்துள்ளனர். அப்போது காரின் பின்பக்க கதவை திறந்து காண்பிக்குமாறு கூறியுள்ளனர். உடனே டிரைவர் காரை விட்டு இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு காரை சோதனை செய்த போது காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதாவது மொத்தம் 12 மூட்டைகள் மற்றும் 91 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து கார் மற்றும். குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தப்பியோடிய டிரைவர் மற்றும் காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.