கத்தி முனையில் மிரட்டி செயின் பறிப்பு: 2 போ் கைது
தூத்துக்குடியில் இளைஞா்களிடம் கத்திய காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள உப்பள ஷெட்டுக்குள் 2 இளைஞா்கள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி கொண்டிருந்தனராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ், மது அருந்திக் கொண்டிருந்த இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி, ஒருவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், தூத்துக்குடி பெருமாள்புரத்தை சோ்ந்த கருப்பசாமி (24), அவரது நண்பா் பேருரணியை சோ்ந்த முனியசாமி என்ற ரமேஷ்(19) ஆகியோா் இந்த சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீசார் , அவா்களிடமிருந்து தங்கசங்கலியை மீட்டனா். மேலும் அவர்களது மோட்டாா் பைக்கை பறிமுதல் செய்தனா்.