உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்: எஸ்பி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபரிடமிருந்து பணத்தை பறித்தது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு

Update: 2024-09-13 03:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபரிடமிருந்து பணத்தை பறித்தது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுந்தரம் என்பவர் பணிபுரிந்து வருகிறார் மேலும் அதே காவல் நிலையத்தில் குணசுந்தர் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார் இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனை என்ற பெயரில் ஆத்தூர் காவல் நிலைய எல்லையை தாண்டி வாகன சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது அப்போது காரில் வந்த ஒரு நபரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லை என கூறி ரூபாய் ஒன்பது லட்சம் பணத்தை பரிமுதல் செய்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து ஏற்பட்ட புகாரை தொடர்ந்து காரில் வந்த நபரிடம் திரும்ப பணத்தை உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோர் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது இவ்வாறு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோர் மீது வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இருவரையும் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் புகாரை தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றம் ச செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Similar News