காங்கேயம் 5 - வது வார்டில் மின் மோட்டார் அறையை பூட்டிய திமுக கவுன்சிலரின் மாமனார்  - பொதுமக்கள் மேலும் ஒரு பூட்டு போட்டு எதிர்ப்பு

காங்கேயம் 5 - வது வார்டில் மின் மோட்டார் அறையை கவுன்சிலர் மாமனார் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களும் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டினார்.  கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகளால் பொதுமக்கள் வேதனை . மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

Update: 2024-09-18 01:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 5 - வது வார்டு பகுதி திருப்பூர் ரோடு, பஜனை மடை வீதி ,தேவாங்கு புரம், மேற்கு வீதி, கட்டபொம்மன் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, புது விநாயகர் கோவில் வீதி, சுபாஷ் வீதி, திருநீலகண்டர் வீதி, வ.உ.சி வீதி, வனிதா கல்வி நிலைய வீதி, திருவிக வீதி என 11 தெருக்களை உள்ளடக்கியது. இந்த வார்டில் திமுகவை சேர்ந்த மீனாட்சி அண்ணாதுரை என்பவர் கவுன்சிலராக உள்ளார் . இந்த வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் கட்டபொம்மன் வீதிக்கு சரிவர வருவதில்லை என்று கூறப்படுகிறது. நேற்று பெண் ஒருவர் மின்மோட்டரை இயக்கிய போது அனுமதி இன்றி யாரும் மின்மோட்டாரை பயன்படுத்தக்கூடாது என கவுன்சிலரின் மாமனார் பழனிச்சாமி மின்மோட்டார் அறையை பூட்டு போட்டு பூட்டி உள்ளார். உடனே கோவம் அடைந்த அப்பகுதி பெண்கள் பதிலுக்கு மேலும் ஒரு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குவாதம் ஏற்படவே இருதரப்பினரும் சாலையில் கூடியதில் 5 - வது வார்டு பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இரவு சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் மீனாட்சி அண்ணாதுரை மின்மோட்டார் அறையை தங்கள் தரப்பினர் போட்டிருந்த பூட்டை திறந்து விட்டு சென்றார். இது குறித்து பொதுமக்கள் சார்பில் பூட்டு போட்டதை திறந்து விடாமல் அப்படியே வைத்திருந்தனர். மேலும் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்து இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகின்றனர்.

Similar News