விருத்தாசலம் அருகே ஆடுகளை திருடிய 2 பேர்கைது

பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து ஒப்படைத்தனர்

Update: 2024-09-18 16:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ் பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் சக்திவேல் (வயது 44). இவரும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் சுந்தரமூர்த்தி என்பவரும் சேர்ந்து சாத்துக் கூடல் பகுதியில் 130 ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி அன்று ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு அங்கேயே இருவரும் தூங்கி உள்ளனர். இரவு சுமார் 11 மணி அளவில் சக்திவேல் உறவினர் வசந்தகுமார் என்பவர் மற்றும் அங்கிருந்தவர்கள் ஆடுகளை திருடி சென்ற இரண்டு பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து சக்திவேலுக்கு போன் செய்து சாத்து கூடல் பள்ளிக்கூடம் அருகே இரு சக்கர வாகனத்தில் 2 ஆடுகளை 2 நபர்கள் திருடி சென்றதாகவும், அவர்களை வளைத்து பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல் கூறியுள்ளார். உடன் சக்திவேல் தனது பட்டியில் சென்று பார்த்தபோது ஒரு பெரிய ஆடு, ஒரு குட்டி ஆடு என 2 ஆடுகள் காணாமல் போனது தெரிய வந்தது. உடன் சக்திவேல் இருவரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்திய போது ஆடுகளை திருட வந்தவர்கள் திட்டக்குடி தொளார் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26), முருகேசன் மகன் முத்தமிழ்செல்வன் (28) என தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News