மோகனூர் அருகே நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது.
மோகனூர் அருகே நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது போலீசார் செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்திவேலூர், நவ.11- மோகனூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 74), அவருடைய வீட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி 24 பவுன் தங்க நகை திருட்டுபோனது. இதுகுறித்து மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் முருகேசன் வீட்டில் நகை திருடியதாக நாமக்கல்லை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34) அருண்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் இரண்டு பேரையும் நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடித்தனர்.