சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இரவில் வெளுத்து வாங்கிய கனமழை...*

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இரவில் வெளுத்து வாங்கிய கனமழை...*

Update: 2024-12-18 02:09 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இரவில் வெளுத்து வாங்கிய கனமழை... தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் மேலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூமாபட்டி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோவில், மம்சாபுரம், வன்னியம்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News