கோவை: மது பாட்டிலால் ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் - 2 பேர் கைது !

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-12-24 12:13 GMT
கோவை NH ரோட்டைச் சேர்ந்த 54 வயதான முஸ்தபா என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநர். நேற்று ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டதையடுத்து அவர் கூறிய இடத்திற்கு சென்றார். அங்கு குடிபோதையில் இருந்த இருவர் முஸ்தபாவை வாக்குவாதம் செய்து மதுபாட்டிலால் தாக்கி விட்டு தப்பியோடினர்.படுகாயமடைந்த முஸ்தபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கரன்ராஜ் (25) மற்றும் சீனிவாசன் (26) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News