கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன் மலையில் உள்ள கூடாரம் பகுதியில் சாராய ரெய்டு சென்றனர். அப்போது கூடாரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன்கள் சுப்பிரமணியன் 64, ராமலிங்கம் 45, ஆகியோர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்களது வீடுகளில் 200 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விதைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் இரண்டு ஏக்கர் நிலத்தில் கஞ்சா சாகுபடி செய்வதற்காக கஞ்சா விதைகள் மறைத்து வைத்திருந்ததும் தெரிந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் கஞ்சா விதைகளை பறிமுதல் செய்த கரியாலுார் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து சுப்பிரமணியன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.