தக்கலை : முதியவருக்கு  2 ஆண்டு சிறை

குமரி

Update: 2024-12-29 07:28 GMT
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் விசுவம் (69). இவர் தனது வீட்டின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தார் என்ற புகாரி பேரில் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில்  20 -5 - 2013 அன்று திற்பரப்பு கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.      அப்போது அங்கு வந்த விசுவம் மற்றும் அவரது மகன் பிரபாகரன்  ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த தொழிலாளர் சேவியர், வினு ஆகிய இரண்டு பேரை அறிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் குலசேகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து  விஸ்வம்,  பிரபாகரனை கைது செய்தனர்.       இந்த வழக்கு பத்மநாதபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று கோர்ட் நீதிபதி பிரவீன் ஜீவா விஸ்வத்தை குற்றவாளி என அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மகன் பிரபாகரன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாதால் அவரை விடுதலை செய்தார்.

Similar News