திருச்சி: லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

தில்லை நகரில் வெளிமாநில லாட்டரி விற்றவர் களிடமிருந்து ₹200 மற்றும் லாட்டரி சீட்டு நம்பர்கள் பறிமுதல்;

Update: 2025-02-21 03:27 GMT
திருச்சி தில்லைநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆழ்வார்தோப்பு பகுதியில் ரோந்து சென்றார் .அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருச்சி தென்னூர் குத்ரிஷாநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் (34), தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி (27) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு நம்பர்கள் மற்றும் ரூபாய் 200 கைப்பற்றப்பட்டது.

Similar News