திருச்சி: பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்;
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 பொதுத் தேர்வு 5-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. மேலும், தேர்வுக்காக 1,662 அறை கண்காணிப்பாளர் கள் மற்றும் 220 பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாளன்று 34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்பட உள்ளது. திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக் கான முதன்மை கண்காணிப்பாளர்கள் 131 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். மேலும் திருச்சி கல்வி மாவட்டத்தில் 1023 அறைக் கண்காணிப் பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர். லால்குடி கல்வி மாவட்டத்தில் 621 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர். திருச்சி வரு வாய் மாவட்டத்தில் 1644 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் பெற் றுள்ளனர். அறை கண்காணிப்பாளர்களுக்கு அவரவர் பள்ளிக்கு நிய மன ஆணை தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டது. சொல்வதை எழுதுபவர் 720 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பறக்கும்படை உறுப்பினர்கள் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அறிவுறுத்தியுள்ளார்