ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.... இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.. ஓடை உடைந்ததால் நகர் பகுதிக்குள் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.... இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.. ஓடை உடைந்ததால் நகர் பகுதிக்குள் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்..*;

Update: 2025-04-06 04:46 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.... இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.. ஓடை உடைந்ததால் நகர் பகுதிக்குள் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறிய நிலையில் காலை முதல் கடுமையான வெயில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வாட்டி வந்த நிலையில் மாலை நேரத்தில் சிறிய சாரலுடன் துவங்கிய மழையானது இரவில் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நகர் பகுதிகள் முழுவதும் வாறுகால்கள் தூர் வராததால் அடைப்புகள் ஏற்பட்டது.இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றனர். மேலும் இந்த இரண்டு மணி நேரம் தொடர் மழை காரணமாக ஓட்ட மடம் பகுதியில் அருகே சிறிய ஓடை உடைந்ததால் நகர் பகுதிகளான ஆராய்ச்சிபட்டி தெரு, ஆத்துக்கடைத்தெரு, மதுரை ரோடு, தைக்காப்பட்டி தெரு உள்ளிட்ட இடங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. நகராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர் அலட்சியத்தால் ஓடைப்பகுதிகளை தூர்வாராததாலும் அடைப்புகளை சரி செய்யாததாலும் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சூழ்ந்ததாகவும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகம் மழைக்காலங்களுக்கு முன்பாகவே ஓடைகளை தூர்வார வேண்டும் ஓடை பகுதிகளின் கறைகளை பலப்படுத்த வேண்டும் நகர் பகுதிகளுக்குள் வாறுகால்களை தூர்வார வேண்டும் பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News