குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே வடக்கு வள்ளியாவிளையை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவரது மனைவி சத்யா (35) இந்த தம்பதிக்கு 11, 7 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். சத்யா உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு தனது 2 பிள்ளைகளுடன் சென்றார். ஆனால் அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சென்று விட்டு பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் கிஷோர் குமார் ஈத்த மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவையும் பிள்ளைகளையும் தேடி வருகின்றனர்.