சேலம் மணியனூர் காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்ற அன்னதானப்பட்டி போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் காந்தி நகரை சேர்ந்த மணி (வயது 25) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய பாலு என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள சமத்துவபுரம் அருகே கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ஜீவா (27) என்பவரை கைது செய்தனர்.