கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் அருகே உடைந்த பீர் பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது;
திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா என்பவர் தனது நண்பருடன் கொட்டப்பட்டி ரோடு பகுதியில் இன்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பள்ளபட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் பாலமுருகன், கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி சேர்ந்த மகேஷ்குமார் (எ)தீனா ஆகிய இருவரும் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி தாங்கள் இந்த ஏரியா ரவுடி என்று கூறி ரூ.1000 பணம் பறித்ததாக சூர்யா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.