அரக்கோணத்தில் போதை மாத்திரைகள் கடத்தல்-2 பேர் கைது!
போதை மாத்திரைகள் கடத்தல்-2 பேர் கைது!;
அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஞாயிறு (மே 18) அன்று எஸ்.ஆர்.கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். எனவே அவர்களை சோதனை செய்து பார்த்ததில், போதை தரும் 591 மாத்திரைகள் இருந்தன. அதனால் செல்வகுமார் (25), யோகேஷ் (24) இருவரையும் போலீசார் கைது செய்தனர், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.